தாமதமாக உணவு டெலிவரி செய்ததால் கைகலப்பு..!

சென்னையில் காவலரை ஹெல்மெட்டால் தாக்கிய உணவு டெலிவரி ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார். எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜார்ஜ் பீட்டர் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் செய்துள்ளார்.

 

ஆர்டர் செய்யும் போது சார்ஜ் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. சரியான வீட்டு முகவரியை தெரிவிக்குமாறு டெலிவரி பாய் கூறியுள்ளார்.ஆனாலும் முகவரியை சரியாக தெரிவிக்காததால் சுற்றி சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இரவு ஒன்பதரை மணியளவில் வீட்டை கண்டுபிடித்து ஜார்ஜிடம் உணவு கொண்டுபோய் கொடுத்துள்ளார்.

 

அப்பொழுது தாமதமாக உணவை டெலிவரி செய்தால் அதை காவலர் குப்பையில் வீசியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது டெலிவரி பாய் ஹெல்மெட்டால் காவலரை தாக்கியதில் டெலிவரி பாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.