சாமியார் வேடத்தில் கஞ்சா விற்ற நபர் கைது..!

சென்னையில் சாமியார் வேடத்தில் கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். ராயப்பேட்டை, மயிலாப்பூர் பகுதிகளில் மக்களுக்கு குறி சொல்லும் சாமியார் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

அதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட தனிப்படை போலீசார் கஞ்சா விற்க முயன்றவர்களை கைது செய்திருக்கிறார்கள். சாமியார் வேசத்தில் இருக்கும் ஆடைக்குள் மறைத்து வைத்து கஞ்சாவை விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவரை கைது செய்த போலீசார் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.