விஜய் உறவினர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை..!

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மற்றும் விஜயின் உறவினருமான சேவியர் பிரிட்டோ என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

 

சீன நிறுவனமான ஜியோமி நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

 

இந்த நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி, இறக்குமதி கையாள்வதில் மாஸ்டர் பட தயாரிப்பாளர் பிரிட்டோவின் நிறுவனம், தொழில் நிறுவனங்களில் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.