கானா பாடகர் சரவெடி சரண் கைது..!

சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடிய சரவெடி சரணை கைது செய்த போலீசார் விசாரணைக்கு பிறகு அவரை காவல் நிலையத்தில் பிணையில் விடுவித்தனர்.

 

சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியை சேர்ந்த கானா பாடகர் சரவெடி சரண் மற்றும் தோனி ராஜ் ஆகியோர் கானா பாடலை யூடியூபில் பதிவேற்றம் செய்து அதில் பல குழந்தைகள் பாதுகாப்புக்கு எதிரான கருத்துக்கள் மிகுந்த வன்மத்துடன் பாடப்பட்டிருந்தது குறிப்பிட்டது.

 

அந்த கானா பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்படி நேற்று கைது செய்யப்பட்டார்.

 

சென்னையில் கைது செய்து அவரை திருவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கானா சரவெடி சரவணா எச்சரித்து அவரிடம் மன்னிப்பு கடிதம் பெற்றுக் கொண்ட போலீசார் அவரை விடுவித்தனர்.