நெதர்லாந்தில் பொது முடக்கம் அமல்..!

பிரிட்டனில் முழு முடக்கம் அமல்படுத்தப்படுமா என கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில் நெதர்லாந்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஓமிக்ரான் பரவல் காரணமாக நெதர்லாந்தில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 

நெதர்லாந்தில் ஓமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள் மற்றும் அத்தியாவசிய மற்ற கடைகள் வருகிற ஜனவரி 14ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

ஓமைக்ரான் பரவல் காரணமாக பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன, பல்வேறு நாடுகளில் இப்போதும் ஊரடங்கும் அமலாக உள்ளது.