முதல் இடத்தை பிடித்த சிக்கன் பிரியாணி..!

தொடர்ந்து 6வது ஆண்டாக உணவு பிரியர்களின் அதிக விருப்பத்திற்குரிய உணவு பட்டியலில் சிக்கன்பிரியாணி முதல் இடத்தைப் பிடித்திருப்பதாக சுவிகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடப்பாண்டில் மட்டும் 6 கோடியே 4 லட்சத்து 44 ஆயிரம் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 115 சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒரு நிமிடத்திற்கு 90 சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

 

சென்னை, ஹைதராபாத், லக்னோ போன்ற இடத்தில் அதிக பேர் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து இருக்கின்றனர். ஆனால் மும்பையில் தாய் கிச்சடியை அதிகம் பேர் ஆர்டர் செய்துள்ளதாக சுவிகி நிறுவனம் தெரிவித்துள்ளது.