கர்நாடக அரசால் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்ட் ஒருவர் மனம் திருந்தி வாழ விரும்புவதாக கூறி திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளரிடம் சரணடைந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்த சந்தியா என்ற அந்த பெண் அந்த மாநில மாவோயிஸ்ட் இயக்கத்தின் மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல குழுவிற்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றி வந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சந்தியா மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து வெளியேறி சமுதாயத்துடன் இணைந்து அமைதியாக வாழ வேண்டி சரண் அடைந்துள்ளார்.