பிரபல திரைப்பட இயக்குனர் எஸ் பி ஜனநாதன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 61. விஜயசேதுபதி, ஸ்ருதிஹாசனை வைத்து லாபம் என்கிற திரைப்படத்தை இயக்கி வரும் எஸ்பி ஜனநாதன் அதற்காக இறுதிக்கட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக எஸ்பி ஜனநாதன் கடந்த 11ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதல் படத்திலேயே சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற எஸ்பி ஜனநாதன் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கியுள்ளார். எஸ்பி ஜனநாதன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.