பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் 6 மாதங்கள் சிறை தண்டனை..!

நீலகிரி மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

 

நீலகிரி மாவட்டம் சுற்றுலா தளமாக இருந்த வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு கேரளா, கர்நாடகா பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கமாக உள்ளது. இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் சமீபகாலமாக முககவசம் அணிவதை தவிர்த்து வந்தனர்.

 

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா தளங்களுக்குவருவோர் மாஸ்க் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.