எடப்பாடி பழனிசாமி, மு.க ஸ்டாலின் ஆகியோர் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்றனர்..!

வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கைகள் என பரபரத்து வரும் தமிழக அரசியல் களம் முக்கிய தலைவர்கள் பரப்புரையை தொடங்க உள்ளதால் இன்னமும் அனல் பறக்க உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் ஆகியோர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்து பரப்புரைப் பயணத்தை தொடங்குகின்றனர்.

 

எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி அங்குள்ள தாலுகா அலுவலகத்தில் இன்று மதியம் ஒரு மணியளவில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து நங்கவள்ளி, ஜலகண்டபுரம், கொங்கணாபுரம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.

 

மூன்றாவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அயனாவரம் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதன் தொடர்ச்சியாக அதே தொகுதியில் பரப்புரையில் ஈடுபடுகிறார்கள்.

 

அமமுக பொதுச் செயலாளர் டி வி தினகரன் கோவில்பட்டியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவிருக்கிறார். திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார்.

 

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.