நடத்தை விதிகளை மீறி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த தற்காலிக ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியை சேர்ந்த திலகவதி ஒப்பந்த அடிப்படையில் தலைவாசல் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் வரும் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார்.
இது தெரியவந்ததையடுத்து தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பாக அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலில் நிற்கப் விருப்ப மனு அளித்ததற்காக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ராமன் தெரிவித்துள்ளார்.