என் வாழ்வின் கடைசி உணவு என ஆர்டர் செய்தவரை காப்பாற்றிய டெலிவரி பாய்..!

சீனாவில் என் வாழ்வின் கடைசி உணவு என்ற குறிப்புடன் ஆர்டர் செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாடிக்கையாளரின் உயிரை டெலிவரி செய்யும் நபர் ஒருவர் காப்பாற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

என் வாழ்க்கையில் கடைசி உணவு என்ற குறிப்புடன் வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்திருந்தார். டெலிவரி செய்யும் நபர் வாடிக்கையாளரின் இடத்திற்கு சென்ற போது கதவு திறக்காததால் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

 

அங்கு வந்த போலீசார் அவரை காப்பாற்றியுள்ளனர். இதனால் உணவு டெலிவரி பாய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.