சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடன் பிரச்சனை என்று கூறி விஷம் கொடுத்து மகனை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டைலர் ஆக பணியாற்றி வந்த சிவாஜியும், அவரது மனைவி வனிதாவும் கடன் பிரச்சினையால் 10 வயதான தங்களது மகனை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இன்று காலை மூவரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனிதாவின் தாய் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் வனிதா எழுதியதாக கூறப்படும் கடிதமொன்று சிக்கியுள்ளது. அதில் கடன் பிரச்சினையால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
சிவாஜி கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தாரா? கடன் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.