தென்கொரியாவில் 7மாத குழந்தைக்கு காய்ச்சல் ஊசி போடுவதற்கு பதிலாக கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சியோமி நகரில் ஏழு மாத குழந்தை ஒன்று வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அதன் பெற்றோர் சிகிச்சைக்காக குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்த மருத்துவர் குழந்தைக்கு வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசி போடுவதற்கு பதில் கொரொனா தடுப்பூசி செலுத்திவிட்டார். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த செப்டம்பரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.