ஜன.3 முதல் 15 -18 வயதுடையோர்க்கு கொரோனா தடுப்பூசி..! ஜன.10 முதல் பூஸ்டர் டோஸ்..!

ந்தியாவில் முன் களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி எனும் கூடுதல் தடுப்பூசியை மூன்றாம் தேதி முதல் 15 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் ஓமிக்ரான் அதிகரித்து வரும் நிலையில் அண்மையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். அதைதொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நேற்றிரவு உரையாற்றினார்.

 

கிறிஸ்துமஸ் வாழ்த்துடன் உரையை தொடங்கிய பிரதமர் இந்தியாவிலும் ஓமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என அறிவுறுத்தினார்.

 

இந்தியாவில் 18 லட்சம் கொரோனா சிகிச்சை படுக்கைகள் தயாராக உள்ளதாகவும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

மேலும் உலகிலேயே முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக கூறினார். 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என மோடி குறிப்பிட்டார்.

 

ஜனவரி 10ஆம் தேதி முதல் மருத்துவர்களுக்கும், முன் களப் பணியாளர்களுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர்களின் பரிசிலனைப்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் மோடி தெரிவித்தார்.