இங்கிலாந்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதால் 25ஆம் தேதிக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 172 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 16 லட்சத்து 40 ஆயிரத்து 473 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் கொரொனா தாக்குதலில் இருந்து 99 லட்சத்து 22 ஆயிரத்து 480 பேர் குணமடைந்த நிலையில் 15 லட்சத்து 77 ஆயிரத்து 470 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மீண்டும் கொரொனா பாதிப்பும் மின்னல் வேகத்தில் பரவி வருவதால் 25ஆம் தேதிக்கு பிறகு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.