கொரோனா பரவலுக்கு இடையே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்..!

வாடிகன் சிட்டியில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட போப் பிரான்சிஸ் இந்த வண்ண விளக்குகள் மற்றும் அலங்காரங்களை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு எப்போதும் உதவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

கொரொனா பரவலுக்கு இடையே உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. வாடிகன் சிட்டியில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். கொரோனா பரவலை கருத்தில்கொண்டு வழக்கத்தை விட குறைவான மக்களே விழாவில் கலந்து கொண்டனர்.

 

வெறும் 2,000 பேர் மட்டும் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்பொழுது உரையாற்றிய போது மனிதர்கள் தன்னை பார்ப்பதை விட பிறர் நலம் பார்த்து செயல்புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.