இன்னுயிர் காப்போம் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்..!

சாலை விபத்துகளில் சிக்கியவர்களின் உயிரை உடனடியாக காப்பாற்றும் வகையில் இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

 

நெடுஞ்சாலைகளில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனடியாக அருகே இருக்கும் மருத்துவமனைகளில் சேர்த்து அவர்களின் உயிரைக் காக்கும் விதமாக இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்தின்படி விபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிப்பதற்கு 610 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், பிரதான சாலையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனைகளும் இடம்பெறுகின்றன.

 

இதன்மூலம் விபத்து நடந்த இடத்தின் அருகே தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும் காயமடைந்தவர்களை சேர்த்து உடனடியாக காப்பாற்றமுடியும். உயிர் காப்பதற்கான 48 மணி நேர சிகிச்சைக்கு ஆகும் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும்.