மாணவிகளுக்கு மட்டும் தனியாக பேருந்துகள் இயக்கம்..!

பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்வதை தவிர்க்க நான்நாகர்கோவிலில் மாணவிகளுக்காக மட்டும் தனியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

 

நாகர்கோவில் அருகே கிராம புதூர் பகுதியில் உள்ள லிட்டில் பிளவர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தினந்தோறும் அதிகளவிலான மாணவிகள் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளில் பயணித்து வருகிறார்கள்.

 

அந்த பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்தாமல் செல்வதாக கூறப்படுகிறது, நிறுத்தப்படும் சில பேருந்துகளில் அதிக அளவில் மாணவிகள் இருப்பதால் படிக்கட்டில் பயணம் செய்யும் நிலை ஏற்படுகிறது.

 

இதையடுத்து மாணவிகளின் வசதிக்காக புதன்கிழமை மாலை முதல் பள்ளி வளாகத்தில் இருந்து இரண்டு அரசு பேருந்துகள் நாகர்கோவில் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கை மாணவிகளுக்கு பேருதவியாக இருக்கும் என பள்ளி ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.