சாக்லெட்டால் உருவாக்கப்பட்ட பாரதியார் சிலை..!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் 6 அடி உயரத்தில் 482 கிலோ எடையில் சாக்லேட் வடிவமைக்கப்பட்ட பாரதியார் சிலை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

புதுச்சேரியில் பேக்கரி ஒன்றில் கிறிஸ்மஸ் புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் சாக்லேட் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 6 அடி உயரத்தில் 482 கிலோ எடையில் மகாகவி பாரதியாரின் சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை சாக்லேட் பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.