மது போதையில் சென்று விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனர்..!

தெலுங்கானாவில் பாலத்தில் சென்ற ஆட்டோ திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோமாரம்பீம் மாவட்டத்தில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

 

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆட்டோ ஓட்டுனர் மதுபோதையில் வந்ததே விபத்திற்கான காரணம் என தெரிவித்துள்ளனர்.