இரண்டு தலை மற்றும் எட்டு கால்களுடன் பிறந்த அதிசய பசு கன்று..!

திருவள்ளூர் அருகே இரண்டு தலை மற்றும் 8 கால்களுடன் பிறந்த அதிசய பசு கன்று உயிரிழந்தது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்கேபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஆதிவராகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் எத்திராஜ். விவசாயியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பசு மாடு ஒன்றை வாங்கியுள்ளார்.

 

அந்த பசுவானது கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்று 2 தலையுடனும். எட்டு கால்களுடனும் பிறந்ததால் அந்த கிராம மக்கள் அதனை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். ஆனால் பிறந்த ஒரு மணி நேரத்திலேயே அந்த பசு கன்று உயிரிழந்ததால் அந்த கிராம மக்கள் சோகம் அடைந்தனர்.