தன்னை விஷம் கொடுத்துக் கொல்ல முயற்சி நடந்ததாக சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கிய சரிதா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன. 2015ஆம் ஆண்டு தனக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாக சரிதாநாயர் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.
வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வந்த அவர் இதனைத் தெரிவித்தார். வேலூர் மற்றும் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உடல்நலம் தேறியதும் தனக்கு விஷம் கொடுத்தது யார் என்பதை கூறுவேன் என்று கூறியிருப்பதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.