ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80% பேருக்கு அறிகுறி இல்லை..!

ந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் 80 விழுக்காடு பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை என ஒன்றிய குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் நாட்டில் 170 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் 80 விழுக்காடு பேருக்கு தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் 13 விழுக்காடு பேருக்கு லேசான பாதிப்புகளை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

இந்தியாவில் தற்பொழுது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிக்கு எந்த அளவு வீரியம் இருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதன் முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் தெரியவரும் எனவும் அமைச்சர் கூறினார்.

 

மிக வேகமாக பரவும் ஓமிக்ரான் பரவலை சமாளிக்க ஆக்சிஜனுடன் வசதிகளுடன் மருத்துவமனை தயாராகி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.