வேலூரில் 3 வது முறையாக நிலஅதிர்வு..!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் அடுத்தடுத்து நிலஅதிர்வு ஏற்படுவதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குடியாத்தம் பேரணாம்பட்டு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளன.

 

இந்த கிராமங்களில் தரைக்காடு பகுதியில் தொடர்ந்து 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

 

தொடர்ந்து நில அதிர்வு ஏற்படுவதால் வீடுகளில் குடியிருக்க அச்சம் ஏற்படுவதாக கூறிய அந்த பகுதி மக்கள் தங்கள் உடைமைகளை அப்புறப்படுத்தி வேறொரு பகுதிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்னவென்று ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.