ஒமிக்ரான் காரணமாக மும்பையில் டிசம்பர் 31 ஆம் தேதி வரை 144 தடை..!

கொரொனா பரவலைத் தடுக்கும் வகையில் மும்பையில் இன்று முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது அந்த வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

 

இதையடுத்து இந்த நோய் இந்தியாவில் பரவி வருவதை தடுக்க வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு ஒன்றிய மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்கு வந்த வந்துள்ளவர்களில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

 

எனவே ஓமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் வரும் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.