10 லட்சம் தடுப்பூசிகள் அழிக்கப்பட்டதால் அதிர்ச்சி..!

லக நாடுகள் நன்கொடையாக வழங்கிய 10 லட்சம் கொரொனா தடுப்பூசிகள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளின் கொரொனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் நன்கொடையாக வழங்கியது.

 

நைஜீரியாவில் போதிய மருத்துவ உட்கட்டமைப்பு வசதி இல்லாததால் நன்கொடையாக வழங்கப்பட்ட 10 லட்சத்து 66 ஆயிரத்து 716 கொரொனா தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களிடையே எதிர்மறைக் கருத்துக்கள் நிலவின.

 

குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தடுப்பூசியை செலுத்த முடியாததால் காலாவதியான தடுப்பூசிகளை அழிப்பதாக நைஜீரிய சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.