வரும் 15 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது..!

காராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் வரும் 15 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருந்தகம், மருத்துவமனை, காய்கறி, பால் கடைகள் மட்டுமே இயங்கும் என்றும் மற்ற அனைத்தும் இயங்க தடை என மகாராஷ்டிர அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

நாக்பூரில் ஒரேநாளில் ஆயிரத்து 800 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டதால் மேலும் கொரொனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்ததை அடுத்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது பல மாநிலங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், சண்டிகர் மற்றும் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாக மத்திய அரசு கடந்த ஒரு வாரமாக எச்சரித்து வருகிறது.

 

இந்த சூழலில்தான் குறிப்பாக மகாராஷ்டிராவில் பாதிப்பு என்பது அதிக அளவில் உள்ளதால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.