திருவண்ணாமலை அருகே ஓடும் பேருந்தில் வடமாநில இளைஞர்கள் இரண்டு பேர் குடிபோதையில் ஒருவர் மீது மற்றொருவர் ஆசிட் வீசி தாக்கிக் கொண்டதில் பயணிகள் பலரும் காயமடைந்துள்ளனர்.
ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து ஒன்றில் ஒட்டக்குடிசல் கிராமம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் இரு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த சாந்தகுமார், சோன குமார் இருவரும் வீதிவீதியாக சென்று பாலிஷ் போட்டு பிழைப்பு நடத்தி வந்ததும் பணம் பங்கு போடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆசிட் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
தாக்குதலில் காயமடைந்த பேருந்து பயணிகள் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.