பெண்களை கௌரவிக்கும் விதமாக ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும்..!

ழைக்கும் பெண்களை கௌரவிக்கும் விதமாக திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் டோக்கன் முறைப்படி ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் அலைமோதியது.

 

பிரியாணி என்ற வார்த்தையை கேட்டால் போதும் அசைவப் பிரியர்களுக்கு நாக்கில் எச்சில் ஊறும். ருசி மிகுந்த பிரியாணியை சாப்பிட நீண்ட தூரம் பயணிப்பவர்களும் உண்டு. உணவில் பிரியாணிக்கு என உலகமெங்கும் தனித்தன்மை இருந்திட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணியை விரும்பாதவர்கள் இல்லை என்றே கூறலாம்.

 

சுப நிகழ்வுகளிலும் திருமணம், திருவிழா போன்ற காரியங்களில் பிரியாணி வழங்குவது சம்பிரதாயமாகவே மாறிவருகிறது. இத்தகைய பிரியாணிக்கு பெயர் போனது திண்டுக்கல். ருசி ஆளும் மனத்தாலும் அனைவரையும் சுண்டி இழுக்கும் தலப்பாக்கட்டு பிரியாணி என தனியாக சுவை ரசிகர்கள் உண்டு.

 

பிரியாணிக்கு பெயர்போன திண்டுக்கல்லில் தான் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. திண்டுக்கல் கரூர் சாலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட உணவகம் ஒன்று ஒரே ஒரு அறிவிப்பால் பிரபலமாகியுள்ளது.