பள்ளி மாணவர்களுக்கு வழங்க இருந்த முட்டைகளில் புழு..!

ரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த முட்டைகள் கெட்டு போயிருந்தது அதிர்ச்சி அடைய செய்தது. குறிப்பாக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் முட்டைகள் அழுகிப்போகும் நிலையில் இருந்துள்ளது.

 

பள்ளி குழந்தைகள் பள்ளியில் உள்ள மேலாண்மை குழுவிடம் புகார் அளித்துள்ளனர். எனவே மேலாண்மை குழு தலைவர் அந்த பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை அழுகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

அங்கிருந்த சத்துணவு பணியாளர்களிடம் வேளாண்மைத் துறையினர் விசாரித்தபோது தங்களுக்கு முட்டைகள் வழங்கப்பட்ட போதே இப்படி தான் இருந்ததாகவும் தெரிவித்தனர்.