பர்தாவுக்கு தடை விதித்து மதரசாக்களை மூடப்போவதாக அறிவிப்பு…!

ஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுக்கு தடை விதிப்பதுடன் ஆயிரத்துக்கும் அதிகமான மதரசாக்கள் எனப்படும் இஸ்லாமிய பள்ளிகளை மூட போவதாகவும் இலங்கை உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

கொழும்புவில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர் இந்த முடிவு கேபினட் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளார். முழு முகத்தையும் மூடக்கூடிய புர்காவால் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறினார்.

 

கடந்த 2019இல் இலங்கை கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 250 பேர் கொல்லப்பட்டனர். உடனே புர்காவுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.