சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் போராட்டம்..!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்களை பதவி இறக்கம் செய்யும் முடிவை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்களை உதவி பிரிவு அலுவலர்களாக பதவி இறக்கம் செய்து ஊதியத்தை குறைக்க பல்கலைக்கழகம் முடிவு செய்து தீர்மானம் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனை கண்டித்து பல்கலைக்கழக தனி அலுவலர்கள் மற்றும் தொடர்பு அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கை வழங்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்களை பல்கலைக்கழக நிர்வாகமும் சட்டத்திற்கு புறம்பாக பதவி இறக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தங்கள் ஒப்புதல் இல்லாமலேயே ஊதியத்தை குறைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இதனால் தமிழக அரசு இதில் தலையிட்டு தங்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தினர்.