தான் அந்த பெண்ணை தாக்கவில்லை என விளக்கம் அளித்துள்ள ஜோமாட்டோ ஊழியர்..!

பெங்களூருவில் ஜோமாட்டோ ஊழியர் தாக்கப்பட்டதாக புகார் கொடுத்த பெண்ணே தன்னை தாக்கியதாகவும் அவரது மோதிரம் பட்டதாலே மூக்கு உடைந்து ரத்தம் வந்ததாகவும் ஜோமாட்டோ ஊழியர் தெரிவித்துள்ளார்.

 

ஆனால் உணவை தாமதமாக கொண்டுவந்து கொடுத்தது குறித்து கேட்டபோது ஊழியர் தன்னை தாக்கியதாக கூறி ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து சக ஊழியர்களிடம் காவல்துறையிடம் விசாரித்தனர்.

 

உணவிற்கான பணத்தை தர அந்தப்பெண் மறுத்ததாகவும் ஆர்டரை ரத்து செய்து விட்டதாகவும் தகவல் வந்ததால் உணவை திரும்பக் கேட்டபோது அதற்கும் அவர் மறுத்ததாகவும் ஊழியர் தெரிவித்துள்ளார்.

 

அந்த பெண் தன்னை ஏசியதோடு செருப்பால் அடித்ததாகவும் அவரது கைவிரல் மோதிரம் தவறுதலாக பட்டதாலே மூக்கு உடைந்து ரத்தம் வந்ததாகவும் ஊழியர் தெரிவித்துள்ளனர்.