இந்தியாவில் ஊடுருவ காத்திருக்கும் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள்..!

ந்திய எல்லைக்குள் ஊடுருவி ஜம்மு காஷ்மீரில் சதி வேலையில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் செயல்பாட்டில் இருப்பதாகவும், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே 250 தீவிரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாகவும் உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்து இருப்பதாக ஜம்மு-காஷ்மீரின் டிஜிபி தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவில் அமைதியை குலைக்க அந்த நாடுகளில் இருந்த தீவிரவாதிகள் ஏவிவிட படுவதாகவும் அவர் கூறியுள்ளார். தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து வரும் ஜூன் 28ல் தொடங்க இருக்கும் அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என காவல்துறை உறுதியளித்துள்ளது.