ஜப்பான் பெண்மணி ஒருவர் ஆறடி நீள கூந்தலுடன் வலம் வரும் வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தலைமுறையின் அன்றாட சவால்களில் முக்கியமான ஒன்று தலை முடி உதிர்வு. எண்ணெய் வைத்து சீகைக்காய் போட்டு தலைமுடியை பராமரித்த காலங்கள் எல்லாம் போய் விட்டன.
இப்போது வரும் ஷாம்புகளில் உள்ள ரசாயனங்கள் முடியை பாதிக்கின்றன. சிலருக்கு அமேசான் காட்டில் கிடைக்கும் அரிய வகை தைலங்களை பயன்படுத்தினாலும் முடி கொட்டுவது மட்டும் நின்றபாடில்லை.
ஆனால் ஜப்பானில் வாழும் பெண்மணி ஒருவருக்கு தமிழ் விளம்பரங்களில் வருவது போல ஆறு அடி நிலத்திற்கு அடர்த்தியான முடி உள்ளது. ஜப்பானைச் சேர்ந்த 35 வயதான மாடல் அழகி ரின் இருபது வயதாகும்போது புத்த மதத்திற்கு மாறியுள்ளார். அதன் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக முடியை வெட்டாமல் தொடர்ந்து வளர்த்து வந்துள்ளார்.
தனது கூந்தலை பராமரிப்பதற்காக குங்குமப்பூவினாலான க்ரீம் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். அவர் தற்போது அவரது கூந்தல் அழகை பற்றி நெட்டிசன்கள் பலரும் பரபரப்பாக பேசி வருகின்றனர். தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்துடன் ஒப்பிடுகிறார்கள் நெட்டிசன்கள்.