அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..!

மிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ஒத்திவைத்துள்ளது.

 

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த கோபிநாத் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி இருப்பதால் வேலையில்லாத் திண்டாட்டம் வறுமை போன்றவற்றால் தமிழக இளைஞர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர் என குறிப்பிட்டுள்ளார்.

 

எனவே தமிழக அரசின் அரசாணை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார் . இந்த வழக்கு விசாரணையின்போது எந்த சட்டத்தின் அடிப்படையில் அரசாணையை எதிர்க்கலாம் என்று நீதிமன்றம் எதன் அடிப்படையில் தலையிடலாம் என்பது குறித்தும் விவரங்களை தயார் செய்யுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.