அச்சு அசல் ஷாருக் கான் மகள் போலவே இருக்கும் பெண்!

சுஹானா கான் போலவே தோற்றத்தில் இருக்கும் பெண் போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.நடிகர் ஷாருக் கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்இருக்கின்றனர். பாலிவுட் சினிமா பிரபலங்கள் பலரும் ஸ்டார் கிட்ஸ் மிக பிரபலமாக இருப்பது போலவே ஷாருக்கின் மகன்கள் மற்றும் மகளும் அதிகம் பாப்புலர் தான்.

 

தற்போது ஷாருக் கானின் மகள் சுஹானா கான் நடிகையாக களமிறங்கி ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். அவர் விரைவில் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் சுஹானா கான் போலவே அச்சு அசலாக இருக்கும் பெண்ணின் போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

சுஹானா துபாய்க்கு சென்ற போது தான் அந்த பெண்ணை சந்தித்து இருக்கிறார். ஆச்சர்யப்பட்ட சுஹானா அவருடன் ஒரு போட்டோவும் எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரது ட்வின் சகோதரி போலவே இருக்கும் அந்த பெண் பாகிஸ்தானை சேர்ந்த சோசியல் மீடியா ஸ்டார் Bareeha தான்.
இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.