கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு..!
கோடை கூடி விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் சொந்த ஊரிலிருந்து சென்னையை நோக்கி மக்கள் படையெடுத்ததால் சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சுங்கச்சாவடி ஊழியர்கள் கூடுதல் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
போக்குவரத்து காவல்துறையினரும் வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இதே போன்று செங்கல்பட்டு மாவட்டம் சுங்க சாவடியில் தென் மாவட்டங்களில் இருந்து வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து சென்னையை நோக்கி புறப்பட்டு சென்றனர்.





