ஆன்லைன் வகுப்பை சரியாக கவனிக்கவில்லை என தந்தை திட்டியதால் மாணவி தற்கொலை..!
உளுந்தூர்பேட்டை அருகே ஆன்லைன் வகுப்பை சரியாக கவனிக்க வில்லை என்பதற்காக தந்தை திட்டியதால் நர்சிங் மாணவி தற்கொலை செய்துகொண்டது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெட்டு நன்னாவரம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் நித்தியா உயிரை மாய்த்துக் கொண்டவராவார்.
சேலத்தில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்த அவர் கடந்த 25ஆம் தேதி ஆன்-லைன் வகுப்பை சரியாக கவனிக்கவில்லை என்று அவரது தந்தை கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி வித்தியா எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நித்யா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






