--- --:--:-- --

ஆவின் நிலையத்தில் தரமற்ற பொருட்கள் விற்பனை – அதிகாரிகள் நடவடிக்கை

4

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆவின் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆவின் விற்பனை நிலையத்தில் சோதனை செய்தனர்.

 

அப்பொழுது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பாதாம் பானங்கள் தர மற்ற நிலையில் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆய்விற்கு பிறகு மாதிரிகளை அனுப்பி வைத்ததுடன் கடை உரிமையாளர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

 

Right Menu Icon