தமிழகத்துக்கான மண்ணென்னெய் ஒதுக்கீடு குறைப்பு : அமைச்சர் சக்கரபாணி
சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்துக்கான மண்ணென்னெய் ஒதுக்கிட்டு அளவை மத்திய அரசு குறைத்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு தற்போது ஒன்பதாயிரம் கிலோ லிட்டர் மண்ணென்னெய் தேவை உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் 4000 கிலோ லிட்டராக மண்ணென்னெய் குறைக்கப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.





