இஸ்லாமிய மக்களின் அச்சத்தை ரஜினி புரிந்து கொண்டார்!
இஸ்லாமியர்களின் அச்சத்தைப் போக்கி நாட்டில் அமைதி நிலவ தன்னால் இயன்றதை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் உறுதியளித்து இருப்பதாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜாமைதீன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் அழைப்பின் பெயரில் போயஸ் கார்டனில் இருக்கும் அவரது இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.
அப்போது குடியுரிமை சட்டத் திருத்தத்தால் இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் அவர்கள் விலக்கியதாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காஜாமைதீன் இஸ்லாமிய மக்களின் அச்சத்தை நடிகர் ரஜினிகாந்த் புரிந்து கொண்டதாகக் கூறினார்.





