தவறாக நடக்க முயன்ற கட்சி நிர்வாகிகள்! காங்கிரசில் இருந்து பிரியங்கா திடீர் விலகல்
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்; பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்து வந்தவர் பிரியங்கா சதுர்வேதி . அண்மையில் இவர் மதுரா நகருக்கு சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து கட்சி தலைமையிடம் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். எனினும், பொது தேர்தலுக்காக, அவர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது பிரியங்கா திரிவேதிக்கு அதிர்ச்சியை தந்தது. இதனால் அதிருப்தி அடைந்த பிரியங்கா சதுர்வேதி, காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரியங்கா விலகியது, அக்கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.





