ஜனவரி 23ஆம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23ஆம் தேதி மதுரைக்கு வருகை தரவிருக்கிறார். மதுரையில் பாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் பிரதமர் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் பங்கேற்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.





