தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்துக – வெளியுறவு அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்
கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்ற இராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.
மீனவர்களை மீட்க உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.





