--- --:--:-- --

பற்றி எரியும் அமேசான் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட அதிபர்!

Capture

அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கானோர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை உற்சாகப் படுத்தும் நோக்கில் அதிபர் ஒருவர் களமிறங்கி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தென் அமெரிக்காவில் பிரேசில் உட்பட 9 நாடுகளில் பரவியுள்ள அமேசான் காடு உலகின் நுரையீரல் ஆக கருதப்படும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத்தீ உலகின் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் நாட்டிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதன் அண்டை நாடான ஒலிவியா தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியில் தீவிரப்படுத்தியுள்ளது. அந்நாட்டு அதிபர் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது உலகின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது தீயை அணைக்கும் பணியில் 800 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த ஒலிவியா அதிபர் மேலும் 100 குழுக்கள் விரைவில் வர உள்ளதாக தெரிவித்தார்.

 

தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர், ராணுவ வீரர் மட்டுமின்றி தன்னார்வலர்களும் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். குறுகிய கால பயிற்சி எடுத்தவர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். ஒலிவியாவில் உள்ள அமேசான் காட்டில் 10 லட்சம் ஹெக்டேர் அளவில் பரப்பளவிற்கு தீயின் பாதிப்பு உள்ளதாக உறுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிபர் களத்தில் இறங்கிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது இந்த பணியில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon