--- --:--:-- --

தேவாலயத்திற்கு சென்று வாக்கு சேகரித்த பிரேமலதா விஜயகாந்த்..!

3

விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேவாலயத்திற்குச் சென்று வாக்கு சேகரித்தார். குறுத்தோளை தினத்தை முன்னிட்டு பாத்திமா அன்னை ஆலயத்தில் திரண்ட கிறிஸ்தவர்களிடம் ஆதரவு திரட்டிய அவர் அங்கு மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்.

 

பங்குத்தந்தை அவருக்கு ஆசி வழங்கினார். திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பது போல் பார்த்து அரவக்குறிச்சி மக்கள் தம்மை தேர்வு செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர் இஸ்லாமியர்களின் வாக்கு தமக்கு அதிகளவில் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon