--- --:--:-- --

போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை சந்தித்து புகைப்படம்

4

நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் இருவர் அவரை அவரது வீட்டில் சந்தித்து மகிழ்ந்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜக்கரியா கடந்த 40 ஆண்டுகளாக ரஜினியின் படங்களை பார்த்து அவருக்கு கடிதம் எழுதி வருகிறார்.

 

குறிப்பாக ஜக்கரியா எழுதும் கடிதங்களுக்கு ரஜினிகாந்த் தனது கைப்பட பதில் கடிதம் எழுதி மகிழ்ந்துள்ளார்.இந்த நிலையில் ஜக்ரியா ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அதேபோல ரஜினியின் தீவிர ரசிகரும் ஓவியருமான சுந்தரும் அவரை சந்தித்தார். தனது மனைவி , மகளுடன் வந்திருந்த சுந்தர் தாம் வரைந்த ரஜினியின் ஓவியங்களை அவருக்கு பரிசாக அளித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon