--- --:--:-- --

மூன்றாவது நாளாக பழனி பஞ்சாமிர்த கடைகளில் தொடரும் சோதனை!

மூன்றாவது நாளாக பழனி பஞ்சாமிர்த கடைகளில் தொடரும் சோதனை!

வரி ஏய்ப்பு செய்ததாக பழனியில் பஞ்சாமிர்த கடைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீடுகளில் வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. பழனி அடிவாரத்தில் உள்ள சித்தநாதன் மற்றும் கந்தவிலாஸ் ஆகியிருந்த கடைகளின் உரிமையாளர்கள் முறையாக வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது.

 

அதன் அடிப்படையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் . சித்தநாதன் பஞ்சாமிர்தம் கடை உரிமையாளரான அசோக்குமார், சிவனேசன் ஆகியோரின் வீடுகள் கடைகள் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் உறவினர்களின் வீடுகள் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடைபெற்று வந்தது.

சோதனையின்போது உரிமையாளர்களின் வீட்டிலிருந்து தங்க நகைகள் சொத்து ஆவணங்கள் கோடிக்கணக்கில் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிய அளவிலான கடைகள் மூலம் விற்பனை செய்து இவ்வளவு சொத்து சேர்க்கப்பட்டதா? அல்லது எவ்வாறு சொத்து சேர்க்கப்பட்டது? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

 

இதேபோன்று கந்த விலாஸ் கடைகளில் உரிமையாளர்களான செல்வகுமார் பாஸ்கரன் ஆகியோரின் வீடுகள் கடைகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.வருமானம் சொத்து மதிப்பு உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சோதனையில் கூடுதலாக ஆவணங்கள் சிக்கின கூறப்படுவதால் இரண்டு நாட்களுக்கு சோதனை நீடிக்கும் என வருமானவரித் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon